மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்று (03) மரணமடைந்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் வைத்து செப்டம்பர் 16 ஆம் திகதி பெண்ணொருவர் விபத்துக்குள்ளானார்.
இவ்வாறு விபத்துக்குள்ளான மீராவோடை – 5 மாதர் சங்க வீதியைச் சேர்ந்த ஆசியா உம்மா எனும் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
-எச்.எம்.எம்.பர்ஸான்