கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அமீர் அலி வித்தியாலய புதிய அதிபராக எம்.சீ.ஐயூப்கான் திங்கட்கிழமை (24) அதிபர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.ஜே.மர்சூக் முன்னிலையில் அதிபர் கடமையினை பொறுப்பேற்று கொண்டார்.
குறித்த பாடசாலையின் அதிபர் வெற்றிடத்துக்கு நேர்முக தேர்வின் போது இலங்கை அதிபர் சேவையிலுள்ள எம்.சீ. ஐயூப்கான் நியமனம் பெற்றுள்ளார்.
பாடசாலையில் பதில் அதிபராக கடமையாற்றி வந்த எம்.எச்.எம்.முபாரக் சிறாஜி பாடசாலை பொறுப்புக்களை புதிய அதிபரிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் கே.எல்.எம்.சபாஹிர், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரும் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் கல்விக் குழு தலைவருமான கே.பி.எஸ்.ஹமீட், பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.றிஸ்வின், பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய அதிபர் எம்.எல்.நிஜாம்தீன், மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய அதிபர் எம்.சீ.எம்.அஜ்மீர், பதுரியா நகர் அல் மினா வித்தியாலய அதிபர் எம்.ஐ.உபைத், தொழிற்பயிச்சி அதிகார சபை போதனாசிரியர் என்.பி.எம்.றிபாஸ், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதி அதிபர் ஏ.ஆர்.எம்.நியாஸ், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.எல்.சலாஹுதீன், உறுப்பினர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்
