உள்நாடு

மீன் பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு படகுகள் மாயம்.

யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களிலிருந்து கடந்த 7 ஆம் திகதி மீன் பிடி தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற இரண்டு மீன் பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட மீன் பிடி படகில்  நான்கு மீனவர்களும் அம்பாந்தோட்டையிலிருந்து புறப்பட்ட மீன் பிடி படகில் இரண்டு மீனவர்களும் இருந்துள்ளனர்.

இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Related posts

சீசெல்ஸ் நாட்டிலிருந்து 254 பேர் தாயகம் திரும்பினர்

ஏலக்காயின் கேள்வி

பிரபாகரனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – சரத் பொன்சேகா.