உள்நாடுவணிகம்

மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகளும் உயர்வு

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

“எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கோழி தீவனம் காரணமாக இன்று ஒரு முட்டையின் உற்பத்தி செலவு மட்டும் 31 ரூபாயாக அதிகரித்துள்ளது. கோழி தீவன விலை உயர்வால் சிறு கோழி வியாபாரிகள் பலர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர். 65 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறியின் விலை 220 ரூபாயாக அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயரும்போது இது மேலும் அதிகரிக்கும். விவசாயி இந்த தொழிலில் நிலைத்திருக்க வேண்டுமானால், ஒரு முட்டையை குறைந்தபட்சம் 38 அல்லது 40 ரூபாய்க்கு விற்க வேண்டும்,” என்றார்.

Related posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள்!

சுமார் 52 கோடி மதிப்புள்ள கப்பல் வழக்கால் கடலில் அழுகுகிறது

அபேகுணவர்தன மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு