உள்நாடு

மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்திய சம்பவம் – 6 பேருக்கு தடுப்பு காவல்

தென் கடற்பரப்பில் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றில் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பில் கைதான 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (03) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த பலநாள் மீன்படி படகில் இருந்து 251.18 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 85 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் கோரிக்கையை ஏற்ற நீதவான், இந்த தடுப்பு காவல் உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை குறைப்பு.

ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்

editor

ராஜித சேனாரத்னவுக்கு பிணை [VIDEO]