உள்நாடுசூடான செய்திகள் 1

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பது தொடர்பிலான ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

(UTV|கொழும்பு) – மீன்பிடிக் கைத்தொழிலைப் பாதுகாத்து நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

ஏற்றுமதி சந்தை தொடர்பாக, கொள்கை அடிப்படையில் புதிய திட்டங்களை வகுக்கும் போது ஏற்றுமதியாளர்கள், மீன்பிடிப்படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றின் மூலம் செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்திற்கு புறம்பான முறைகளில் மீன் பிடிப்பதை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகள் மூலம் இப்பிரச்சினையை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக தனியார் துறையினரின் உதவியோடு அவர்களின் விளைச்சலை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

புதிய மின்சார சட்டம்: ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைத்து, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் : சஜித் குற்றச்சாட்டு

பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான வதந்திகள் தொடர்பில் நடவடிக்கை

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி