உள்நாடுபிராந்தியம்

மீன்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த 9 வயது பிக்கு – குளத்தில் தவறி விழுந்து பலி

குருணாகலில் வெல்லவ கினிகாராவ ரஜமஹா விகாரையில் உள்ள குளத்தில் தவறி விழுந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9 வயதுடைய பிக்கு ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த போது குளத்தில் தவறி விழுந்துள்ள நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தயாசிறி ஜயசேகரவும் இராஜினாமா

அரச, தனியார் துறை பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

குணமானோர் எண்ணிக்கை 30,000 இனைக் கடந்தது