சூடான செய்திகள் 1

மீனவர் சடலமாக மீட்பு

(UTV|COLOMBO) நீர்கொழும்பு – ஏத்துகால கடற் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான படகில் இருந்து மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – ஏத்துகால பிரதேசத்தினை சேர்ந்த 51 வயதுடைய மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி குறித்த நபர் உட்பட 04 பேர் கடலுக்கு சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.படகு கற்பாறை ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் 03 பேர் உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி  குறித்த நபர் நீரில்மூழ்கி காணாமல் போயுள்ளதுடன், அவரது சடலம் புனபிடிய கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

பொடி லெசியின் தாயாரின் பிறந்த நாளுக்காக 2.5 மில்லியன் செலவில் விருந்துபசாரம்

ஐக்கிய தேசிய முன்னணினர் மற்றுமொரு கலைந்துரையாடல் இன்று

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும்