வகைப்படுத்தப்படாத

மீதொட்டமுல்ல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் நிவாரணம்

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் விசேட அத்தியாவசிய ஒரு தொகை நிவாரணத்தை நேற்று விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிவாரணப்பொருட்கள் இடர்முகாமைத்துவ அமைச்சில் இடர்முகாமைத்துவ அமைச்சிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள ஜப்பான் நாட்டுக்கான தூதுவர் கொனிச்சி சுகனுமா வினால் இந்த பொருட்கள் இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளிக்கப்பட்டது.

நுளம்பு வலைகள் மெத்தைகள் நீர் சுத்திகரிப்பிற்கான இயந்திரங்கள் நீர் எடுத்துச்செல்வதற்கான உபகரணங்கள் மின்பிறப்பாக்கிகள் விளக்குகள் உள்ளிட்ட பல பொருட்கள் இதில் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரவு நேர அஞ்சல் தொடரூந்து சேவை இரத்து

Djokovic beats Federer in Wimbledon epic

මාලඹේ – කොළඹ සැහැල්ලු දුම්රිය මාර්ගය සමාරම්භක උත්සවය අදයි