உள்நாடு

மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை

(UTV | கொழும்பு) – வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் சகல பிரஜைகளும் பொறுப்புடன் செயற்படுவதும் சுகாதாரமான நடைமுறைகளை கடைபிடிப்பதும் மிகவும் அவசியமானது என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை, சமூகத்தில் இனங்காணப்பட்ட பெரும்பாலான கொரோனா வைரஸ்கள் ஒமிக்ரோன் வைரஸ் வகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் மேலும் 1,331 கொரோனா தொற்றாளர்கள் நேற்று (06) பதிவாகியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் மொத்தமாக 618, 520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றுமுன்தினம் மரணங்களை உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,595 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Related posts

தமிழ் வேட்பாளரை இரவு பகலாக தேடி வருகிறோம் – விக்னேஸ்வரன்

12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

IMF இரண்டாவது கடனுதவிக்கு அனுமதி!