வகைப்படுத்தப்படாத

மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரம் – அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன

(UDHAYAM, COLOMBO) – மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரம் – மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக மீண்டும் மார்ச் மாதம் 29ம் திகதி முதல் ஏப்பிரல் 4ம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்ப்படுத்தப்படும் என்று டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் கடந்து சென்ற காலங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 24 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை:மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பாரியளவு எரிபொருள் திருட்டு

கடும் நிபந்தனைகளுக்கமைய இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ள தீர்மானம்!