உள்நாடு

மீண்டும் செயலிழக்கும் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம்

(UTV | கொழும்பு) –   உராய்வு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனியவளக் கூட்டுத்தாபனத்தினால், இலங்கை மின்சார சபைக்கு இன்றைய தினம் வரையில் மாத்திரமே உராய்வு எண்ணெய்யை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை காரணமாக இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய தினம் பிற்பகல் 2 மணிவரையிலான காலப்பகுதிக்கு மாத்திரம் அவசியமான உராய்வு எண்ணெய் மின்னுற்பத்தி நிலையத்தின் கையிருப்பில் உள்ளதாகவும் பொறியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related posts

ரணில் தற்றுணிவுடன் செயற்பட்டார் : ஜனாதிபதி அநுரவுக்கு தற்றுணிவு கிடையாது – விமல் வீரவன்ச

editor

வாகன அலங்கார நிலையத்தில் தீ விபத்து

editor

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி