அரசியல்உள்நாடு

மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – துமிந்த சில்வா மனு தாக்கல்

முறையான மருத்துவ பரிந்துரை இல்லாமல் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து தன்னை சிறை அறைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து, மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா தாக்கல் செய்த மனு நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் இந்த மனுவின் பரிசீலனை மே மாதம் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், அந்த திகதிக்கு முன்னர் எழுத்துபூர்வ ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவும், உண்மைகளை உறுதிப்படுத்த தேவையான பிரமாணப் பத்திரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் சட்டமா அதிபருக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி வழக்கறிஞர் ரியன்சி அரசகுலரத்ன, தனது கட்சிக்காரர் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலுக்கு ஆளாகியும், தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகியும், பல அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டும் இருப்பதால் அவரை மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Related posts

பல பகுதிகளில் மின்சாரம் தடை

editor

அசுத்தமான குளியலறை, சிறிய சிறைக்கூண்டு பூச்சிச் தொல்லை சிறையில் அவஸ்தைப்படும் இம்ரான்கான்!

டிரான் அலஸ், தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 கோடி ரூபா கோரினர் – ஹரக் கட்டா

editor