கேளிக்கை

மீண்டும் சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்

(UTV |  சென்னை) – அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றாக கருதப்படும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான சிறந்த படங்களாக 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. நவம்பர் 20ம் திகதி விருது குறித்து அறிவிப்பை வெளியிடுகின்றனர்.

சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியும் காயத்ரியும் ஜோடியாக நடித்திருந்தனர்.

இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமி கூறும்போது, ”அர்பா சர்வதேச திரைப்பட விழாவானது 25-வது ஆண்டாக நடக்கிறது. வெள்ளிவிழா ஆண்டில் நடக்கும் புகழ் பெற்ற இவ்விழாவில் திரையிடப்படும் ஐந்து படங்களில் ஒன்றாக விஜய்சேதுபதி நடித்து எனது இயக்கத்தில் வெளியான மாமனிதன் படம் திரையிட தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு குழுவினருக்கு நன்றி” என்றார்.

ஏற்கனவே மாமனிதன் படம் டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த ஆசியப்படத்துக்கான தங்க பதக்கம் விருதையும் பூடான் நாட்டில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டு 4 விருதுகளையும் சிங்கப்பூர் பட விழாவில் திரையிடப்பட்டு 4 விருதுகளையும் பெற்றுள்ளது. மாமனிதன் சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வருவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

யொஹானி துபாய் நோக்கி..

Africa Photographer of the year 2018 இறுதி 20 புகைப்படங்களில் லக்ஷிதவின் Swinging time…

ஃபீல் பண்ண நான் இங்கு வரவில்லை : ஷெர்லின் சோப்ரா