உள்நாடு

மீண்டும் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பில்; இந்த விடயம் குறித்து எமது செய்தி பிரிவு லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச்.வேகப்பிடிவை தொடர்பு கொண்டு வினவியது. இதற்கு பதிலளித்த அவர்,

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாக நாட்டில் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை வணிக வங்கிகளினால் எரிவாயுயை பெற்றுக் கொள்வதற்கான கடன் கடிதங்கள் வழங்கப்படாமையினாலே தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

editor

மேலும் 410 பேர் பூரண குணம்

தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பூநகரி தபாலகம்!