உள்நாடு

மீண்டும் அதிகரித்து வரும் காய்ச்சல் – எச்சரிக்கை விடுக்கும் வைத்திய நிபுணர்கள்

காய்ச்சல், இருமல் அல்லது சளி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் மருத்துவ உதவியை உடன் நாடுமாறும் சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில், பருவகால காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, கர்ப்பிணிப் பெண்கள் காய்ச்சல் இருக்கலாம் என சந்தேகிக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவேண்டும் என ஆலோசகர் தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சிந்தன பெரேரா தெரிவித்தார்.

அத்துடன், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் நீரிழிவு அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை இந்த காய்ச்சல் பாதிக்கக்கூடும்.

கைகளை சுத்தமாக வைத்திருப்பதுடன் முகம் அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுவான தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவது மூலம் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் டொக்டர் சிந்தன பெரேரா குறிப்பிட்டார்.

இந்த காய்ச்சல், பரவுவதற்கான காரணம் பொதுவாக சுவாச ஒத்திசைவு வைரஸ் Respiratory syncytial virus (RSV), Human Metapneumo virus (hMPV), மற்றும் Mycoplasma pneumoniae. போன்ற சுவாச நோய்க் கிருமிகளின் பருவகால தொற்றுநோய்களால் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் – வழக்கிலிருந்து நெடுமாறன் விடுவிப்பு

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

இலங்கை சோதனை முனையில் நிற்கிறது – சஜித் பிரேமதாச

editor