கேளிக்கை

மீடூ இயக்கத்தில் நானில்லை-நித்யா மேனன்

(UTV|INDIA)-முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயாராகி வரும் நித்யாமேனன், மீடூ இயக்கத்தில் சேரமாட்டேன் என்று கூறியிருக்கிறார். 

பிரியதர்ஷினி, லிங்குசாமி, விஜய், பாரதிராஜா ஆகியோர் இயக்கத்தில் தனித்தனியாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளது. இதில் பிரியதர்ஷினி இயக்க உள்ள படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளார்.
இப்படத்திற்கு தி அயர்ன் லேடி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நித்யா மேனன் பேட்டியளித்த போது இப்படம் பற்றி கூறியுள்ளார். அதில், “இது மிகப்பெரிய படம். பிரியதர்ஷினி என்னிடம் கதை சொன்ன போது மிகவும் பிடித்திருந்தது. கதை குறித்து மிகுந்த கவனத்தோடு அவர் இருக்கிறார். ஒரு பயோபிக் படம் பண்ணும்போது முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரத்திற்கு நியாயமான, தேவையான நடிப்பை வழங்க வேண்டும் என சொல்லிவிட்டேன். சரியான பாதையில் மிகுந்த நம்பிக்கையோடு பட வேலைகளை பிரியதர்ஷினி செய்துவருகிறார்.
இப்படத்தில் நடிப்பதற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். அது ஒரு நடிகையாக எனக்கு மிக சுவாரசியமானதாக இருக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் மீடூ இயக்கம் பற்றி கூறும் போது, “மீடூ இயக்கத்திற்கு நான் எதிரானவள் இல்லை. ஆனால் பாலியல் அத்துமீறல் போன்ற தவறான வி‌ஷயங்களை எதிர்ப்பதற்கு என்னிடம் வேறு வழி உள்ளது. நான் குழுவில் இணைந்து போராட விரும்பவில்லை, அமைதியாக சாதிக்க நினைக்கிறேன்.
இதுபோன்ற வி‌ஷயங்கள் பற்றி பேசாததால் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவளிக்கிறேன் என அர்த்தம் இல்லை. நான் மாறுபட்ட அணுகுமுறையை வைத்திருக்கிறேன். வேலையின் மூலமாகவே அதை செய்ய முடியும் என நினைக்கிறேன் என்றார்.

Related posts

ரஜினியின் மகளும் அரசியலில்

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

பிரபல மொடல் அழகி கொலை…