உள்நாடு

மின் விநியோகம் நாளை முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக மின் வெட்டு நாளையுடன்(22) நிறைவுக்கு வருவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டி மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு மின் வெட்டு மேற்கொள்ளப்பட்டது.

திருத்தியமைக்கப்பட்ட நுரைச்சோலை மின்நிலையம் பிரதான மின்சாரக் கட்டமைப்புடன் இன்று இணைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், நாளை  முதல் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3,406 முறைப்பாடுகள் பதிவு

editor

தற்போது வரை 1446 பேர் குணமடைந்தனர்

தெமட்டகொட மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]