உள்நாடு

மின்னுற்பத்தி திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனை

(UTV | கொழும்பு) -எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த மின்சார தேவையின் 70 வீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்திகளினூடாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சூரிய, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும் வகையிலான நிலையான வளர்ச்சிக்கு வழியேற்படுத்தும் வகையில், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திகளை பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்திக்கு அரசினால் முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளும் காலநிலை மாற்றத்தினால் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திகளினூடாக மின்சார உற்பத்தியை முன்னெடுப்பதற்கு தயாராகிவருவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன் மின்சார கேள்வியும் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.து.

Related posts

உயர்தரப் பரீட்சை தொடர்பில் அவசர அறிவிப்பு

editor

அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஈரான் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

editor

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகம் நியமனம்

editor