உள்நாடு

மின்னழுத்தியால் மகனுக்கு  சூடு வைத்த தாய் கைது

(UTV|மட்டக்களப்பு) – மட்டக்களப்பு – காத்தான்குடி, இரண்டாம் குறிச்சியில் 9 வயது மகனை மின்னழுத்தியால் சூடு வைத்து காயப்படுத்திய தாய் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த தாயை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தீக்காயங்களுக்குள்ளான சிறுவன் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாயுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர், மின்னழுத்தியை சூடாக்கி மகனை காயப்படுத்தியுள்ளமை விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள போதிலும், நேற்றைய தினமே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொழும்பிற்கு 10 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் தீர்மானமில்லை

வந்தார் ஐயா : நாளை மறுதினம் பெயர் பதிவாகும்