யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கு பகுதியில் விவசாய காணியில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் இன்று (08) நண்பகல் மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக விவசாய காணியில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் இருந்த வேளை மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஏழாலை கிழக்கை சேர்ந்த 39 வயதுடைய குணரட்ணம் குமரன் என்பவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-பிரதீபன்