உள்நாடு

மின்சாரம் ,நீர் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் விசேடசெயற்திட்டம்

(UTV|கொழும்பு)- நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில் காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேடசெயற்திட்டம் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, இலங்கை மின்சார சபை, தனியார் மின்சார நிறுவனம் மற்றும் இலங்கைபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிறுவனங்கள் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன.

மேலும், நீர் மற்றும் மின் துண்டிப்பு தொடர்பில் தகவல் வழங்கி அதனை சீர்செய்து கொள்ள, பொறியலாளர்களை தொடர்புக்கொள்ளவும் முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

Related posts

ஐ.தே.கட்சியின் 76வது ஆண்டு நினைவு தினம் இன்று

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்

மாகாண எல்லையினை கடக்க முயன்ற 113 வாகனங்கள் சிக்கின