வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒருவரே, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூன்று மாடி கட்டிடத்திற்கு அருகிலுள்ள மின் கம்பி அமைப்பினால் மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.