நொச்சியாகம அந்தரவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
நொச்சியாகம அந்தரவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான தர்மசேன முதியன்சலாகே சந்தி பியதர்ஷனி என்ற வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள கோழி கூடுகளை மூடுவதற்கு சென்றிருந்த போது கோழி கூடுகளுக்கு இணைக்கப்பட்டுள்ள மின்சார கம்பியை தவறுதலாக தொட்டதால் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.