சூடான செய்திகள் 1

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை…

(UTV|COLOMBO) மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மின்சாரத்தை நாளாந்தம் தடையின்றி விநியோகிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

குறித்த இந்த பேச்சுவார்த்தையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க , அமைச்சர்களான பாட்டளி சம்பிக்க ரணவக்க , ராஜித்த சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் நீர் மின்சார உற்பத்தி நிலையங்களை அண்டிய பிரதேசங்களுக்கு மழை கிடைத்த போதும் நீர் கொள்ளளவு பாரியளவில் அதிகரிக்கவில்லை என இதன்போது தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம்?

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை