உள்நாடுபிராந்தியம்

மின்கம்பத்துடன் மோதிய லொறி – இருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் ஏ – 7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற சிறிய ரக லொறியே நானுஓயா பங்களாஹத்த பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமுற்ற சரதியும் மற்றொருவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் காரணமாக லொறிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் கவனமாக பயணிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Related posts

கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன், மருமகன் சடலமாக மீட்பு

editor

திருமணம் செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

editor

அரச ஊடக நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி