சூடான செய்திகள் 1

மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 7 பேர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன்  தொடர்புபட்டவர்களென, சந்தேகதத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இவர்கள் தலா இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமிருவரின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையாத நிலையில், இச்சந்தேகநபர்கள் இருவரையும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை

“2020 இல் சஜித் வருகிறார்” மக்கள் பொதுக் கூட்டம்…

ஜனாதிபதியின் அதிரடி திட்டம்