உள்நாடுபிராந்தியம்

மினுவாங்கொடையில் போதைப்பொருட்களுடன் 37 வயதுடைய ஒருவர் கைது

மினுவங்கொட பொலிஸ் பிரிவின் உன்னாருவ பகுதியில் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (06) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படை கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதான மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

UNP கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் – ரஞ்சித் பண்டார.

51% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

editor