உள்நாடுவணிகம்

“மா விலை குறைவினால் பாண் – பன்களின் விலையில் மாற்றமில்லை”

(UTV | கொழும்பு) – சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 290 ஆக குறைத்தாலும் பாண், பன் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என என். கே. ஜெயவர்தன தெரிவித்திருந்தார்.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 270 ரூபாவுக்கும் குறைந்தால் மாத்திரமே பாண், பன் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பேக்கரி உரிமையாளர்கள் 300 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு கறுப்புச் சந்தையில் கோதுமை மாவை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், அரசாங்கம் தலையிட்டு 250 ரூபாவாகக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 250 ரூபாவாக குறைக்கப்பட்டால், பாண், பன் போன்ற பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பேக்கரிகளுக்குத் தேவையான 50% கோதுமை மாவை வழங்கும் இரண்டு கோதுமை மா நிறுவனங்களும் கோதுமை மாவின் விலையைக் குறைக்க வேண்டும் என்றும், பாண் மற்றும் பன் போன்ற பேக்கரி பொருட்களின் விலைகளை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் ஜயவர்தன மேலும் கூறுகிறார்.

Related posts

சபாநாயகர் சர்வதிகார போக்கு? நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி!!

வவுனியா இரட்டைக் கொலை : பிரதான சந்தேக நபர் பெண் ஒருவருடனும் 90 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடல்

விரைவாக பதில் – தொழிலாளர் அமைச்சினால் புதிய வாட்ஸ்அப் இலக்கம்

editor