அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜா விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிரார்த்திக்கிறேன் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிரார்த்திக்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (28) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் – IMF பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த ஜனாதிபதி அநுர

editor

சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது – அமைச்சர் விஜித ஹேரத்

editor