அரசியல்உள்நாடு

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக வாகரை பகுதியில் வெள்ளம் – சிறிநாத் எம்.பி விஜயம்

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள வாகரை பகுதிக்கு சிறிநாத் எம்.பி விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்படுள்ள வெள்ள நிலைமையினால் திருகோணமலை – மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, குறித்த பகுதியில் உள்ள மக்கள் கதிரவெளி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்விடர் நிலைமையினை அறிந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் குறித்த இடத்திற்கு இன்றைய தினம் 30.11.2025 விரைந்து சென்று மக்களோடு மக்களாக களத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய ஜெரோம் பெர்னாண்டோ!

‘ஜசீரா’ விமான சேவை ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவு!

editor