உள்நாடுபிராந்தியம்

மாவனெல்லை, ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று (23) இரவு பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் விபத்து சம்பவித்துள்ளது.

தலகொல்ல பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததினால் முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் உள்ளே சிக்கிய நிலையில், அதிலிருந்த சிறுவன் மீட்கப்பட்டு தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசன வெற்றிடத்திற்கு அஜித் மன்னப்பெரும

பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பம்

சீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப நடவடிக்கை