சூடான செய்திகள் 1

மாவனெல்லை பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள ஆசிரியர் கலாசாலையிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பேரூந்து ஒன்று மாவனெல்லை – பஹல கடுகண்ணாவை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 35  வரையில் பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

காயமடைந்தவர்களில் 35 பேர் மாவனெல்லை மருத்துவமனையிலும், 6 பேர் கண்டி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவு(05) அட்டாளைச்சேனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்