சூடான செய்திகள் 1

மாவனெல்லையில் உள்ள மேலதிக வகுப்புக்கள் கட்டிடமொன்றில் தீ விபத்து

(UTV|COLOMBO) நேற்றிரவு மாவனெல்லை நகரில் பல விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டிடமொன்றின் மேல் மாடியில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றைய கட்டிடங்களுக்கு பரவுவதற்கு முன்னர் மாவனெல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் மேலதிக வகுப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த இடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , சம்பவம் தொடர்பில் மாவனெல்லை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

சர்ச்சைக்குரிய மத போதகர் விவகாரம்- ஜம்மியதுல் உலமா அறிக்கை

நாடளாவிய வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் தொடர்பான விபரங்கள்…!

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 06ம் திகதி…