உள்நாடுபிராந்தியம்

மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசளிப்பு!

கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை பாடசாலை கூட்ட மண்டபத்தில் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மயோன் குழும நிறுவனத்தின் பணிப்பாளரும், மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான எம். றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டத்துடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் மயோன் சமூக சேவைகள் அமைப்பின் இலச்சினை பொறிக்கப்பட்ட பாடசாலை பை, அப்பியாச கொப்பிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ஹில்மி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடக இணைப்பாளர் எம்.எம்.சாஜீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பாளர் அஹமட் ஜெமீல், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்காளர் அட்டை விநியோகம் இன்று

editor

கிளிநொச்சி விவசாயிகள் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு!

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

editor