உள்நாடு

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வந்தார்

(UTV | கொழும்பு) – மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார்.

சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி இப்ராஹிம் சோலிக்கு இலங்கை அரசு சார்பாக வரவேற்பளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைத்தீவு ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் இலங்கை வரும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னதாக இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு, 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி பிரதம அதிதியாக இலங்கை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜெட் விமானம் விபத்து – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor

ரயில் சேவைகள் செப்டம்பர் முதல் வழமைக்கு

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த புதிய இடம் – ரணில் விக்ரமசிங்க.