வகைப்படுத்தப்படாத

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் சபாநாயகராக தெரிவு

(UTV|MALDIVES) மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட், அந்நாட்டு 9ஆவது சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மாலைதீவு பாராளுமன்றத்தில் நேற்றிரவு நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற மொஹம்மட் நஷீட், அந்நாட்டின் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மாலைதீவின் சபாநாயகர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதியுடன் அமைச்சர் காசிம் இப்ராஹிம் ஆகியோரிடையே போட்டி நிலவியமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், வாக்கெடுப்பில் மொஹம்மட் நஷீட்டுக்கு ஆதரவாக 67 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் காசிம் இப்ராஹிமுக்கு 17 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Related posts

Rishad Bathiudeen arrives at OCPD

காரைநகர் பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்!

Light showers expected in several areas today