விளையாட்டு

மாலி விடை பெற்றார்

(UTV | கொழும்பு) –  20 – 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியைச் சேர்ந்த மலிங்கா இந்த ஆண்டு தொடகத்தில் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது 20 -20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பை மலிங்கா தனது யூ டியூப் சேனலில் அதிகாரபூர்வாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ இன்று நான் 20 -20 போட்டிகளுக்கு நிரந்தரமாக ஓய்வை அளிக்க முடிவு செய்திருக்கிறேன். 20- 20 கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எனது அணிக்கும் (இலங்கை அணி, மும்பை இந்தியன்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ்) , அணியில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்”

மலிங்கா சர்வதேச அளவில் 20 -20 போட்டிகளில் 107 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் மலிங்கா விடைபெற்று இருக்கிறார்.

Related posts

கப்திலை பின்னுக்கு தள்ளிய கோஹ்லி

ஜேம்ஸ் ஆண்டர்சனின் புதிய உலக சாதனை

21 சதங்களை கடந்த உலகின் 4ஆவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா