வகைப்படுத்தப்படாத

மாலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

மாலியில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மாலி நாட்டின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், நிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இந்த வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளை இழந்து மக்கள் முகாம்களில் தங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற அந்நாட்டு அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பொலிஸார், மீட்பு பணியினர் ஓய்வின்றி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

 

 

Related posts

Kylie finds true love

அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டம் இன்று முதல்

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்ப காற்று தாக்குதல்…