மாலபே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு நேற்று (21) கிடைத்தது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில், பெறுமதிமிக்க மரக்கன்றுகளும் நிறுவனத்திற்கு பரிசாக வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட விரிவுரையாளர் கிம்ஹான் சூரியபண்டார, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு
