மாரவில முது கட்டுவ கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கரை ஒதுங்கிய சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் எவையும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.