உள்நாடு

மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் 62 பயணிகளைக் காப்பாற்றிய பஸ் சாரதி

மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த போதிலும், 62 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின்சாரதி, சாரதி இருக்கையில் அமர்ந்திருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் கவனமாக பஸ்ஸை நிறுத்தி இருக்கையில் மயங்கி விழுந்தார்.

இதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்த பயணிகள், சாரதியை சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அவர் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட பின்னரும், பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டதற்காக பஸ் சாரதியை, பஸ் பயணிகள் மற்றும் யாழ்ப்பாணம் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவின் சிரேஷ்ட அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Related posts

மட்டக்களப்பில் அனுமதி பத்திரமின்றி பேருந்துகள் : 11 பஸ்கள் வலைவீச்சு

ஸ்ரீதரனுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க ஆளுநர் மறுப்பு