உள்நாடு

ஊரு ஜுவாவின் உறவினர் கைது

(UTV|கொழும்பு) – ஒரு கிராம் 850 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது சிறையிலுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற ஊரு ஜுவா என்கின்ற மாம்புனகே மிலான் மாம்புலன என்ற நபரின் உறவினராக கருத்தப்படும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹங்வெல்ல, ரணால மற்றும் நவகமுவ உள்ளிட்ட பிரதேசங்களில் மனிதவள நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து ஏஜென்சி நிறுவனங்களில் பலாத்காரமான முறையில் கப்பம் பெற்றுள்ளதாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 137,067 பேருக்கு கொவிட் தடுப்பூசி

 srilankan airlines இன் 42 விமானிகள் இராஜினாமா

புத்தளத்தில் காணமல் போன சிறுவன், பிக்குவாக கண்டுபிடிப்பு!