உலகம்

மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த சீனாவில் சட்டம்

(UTV|சீனா) – விலங்குணவுகள் ஊடாகவே, கொரோனா போன்ற வைரஸ் நோய்கள் பரவுகின்றன என்ப​து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சீனாவில், மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்களைத் தீவிரப்படுத்த, சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உறுதிப்படுத்தப்படாத போதிலும், புதிய கொரோனா வைரஸானது, வௌவால், பாம்புகள் ஊடாகவோ அல்லது சீனர்கள் உட்கொள்ளும் ஏனைய விலங்கினங்கள் ஊடாகவோ இந்த நோய் பரவியிருப்பதாக, ஓரளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், அனைத்து வகையான விலங்கினங்களையும் சீனர்கள் உட்கொள்வதாலும் ஏனைய நாட்டவர்கள் அருவருக்கக்கூடிய உணவுகளைக்கூட சீனர்கள் உட்கொள்வதால், விலங்குப் பண்ணை வியாபாரத்துக்கு சீனாவில் நல்ல கேள்வி உள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட சில விலங்குணவுகளை உட்கொள்வதற்குத் தடை விதிக்க, கடந்த வாரத்தில் சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்களைத் தீவிரப்படுத்தவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

twitter நிறுவனத்தின் புதிய CEO

பலஸ்தீன் மூதாட்டி மீது, இஸ்ரேல் மேற்கொண்ட கொடூரம் ..!

சீனாவில் மற்றுமொரு பயங்கர வைரஸ் பரவல்