உள்நாடுபிராந்தியம்

மாமனார் பொல்லால் தாக்கியதில் 24 வயதுடைய மருமகன் உயிரிழப்பு!

காலியில் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மருமகனே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று, கொலைசெய்யப்பட்ட மருமகன் தனது வீட்டில் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ள நிலையில் மதுபோதையில் உள்ள நண்பர்களை அவர்களது வீடுகளுக்கு கொண்டுசென்று விடுவதற்காக மாமனாரிடம் முச்சக்கரவண்டியை கேட்டுள்ளார்.

ஆனால் மாமனார் தனது முச்சக்கரவண்டியை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மருமகன் பொல்லால் வீட்டின் கதவை அடித்து உடைத்து மனைவியை தாக்க முயன்றுள்ளார்.

மதுபோதையில் உள்ள மருமகனை தடுப்பதற்காக மாமனார் தனது மருமகனை பொல்லால் தாக்கியுள்ளார்.

காயமடைந்த மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான 58 வயதுடைய மாமனார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இறந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அறுகம்பே பாதுகாப்பு குறித்து பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

editor

அநுர மன்னிப்புக் கோர வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 150 மி.மீற்றர் வரை பலத்த மழை