அரசியல்உள்நாடு

மான்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் எம்.பி அருண பனாகொட வெளியிட்ட தகவல்

ஹோமாகம நகரைச் சுற்றியுள்ள பல கிராம சேவைப் பிரிவுகளில் பரவிவரும் மான் கூட்டங்களை பொருத்தமான பகுதிக்கு கொண்டுச்சென்று விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட நேற்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேற்படி பகுதிகளில் 1,500 முதல் 2,500 வரை மான்கள் இருப்பதாகவும், அவை விவசாய நிலங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“எங்களது ஹோமாகம தேர்தல் தொகுதியில் 5 அல்லது 6 கிராம சேவையாளர் பிரிவுகளில் அதிகளவான மான்கள் காணப்படுகின்றன.

இந்த சூழ்நிலையை சரிசெய்ய நாங்கள் பல வருடங்களாக நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த விலங்குகளை இங்கிருந்து அகற்ற வனப் பாதுகாப்புத் திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

வனப் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து, தொகுதியில் உள்ள மான்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கான கணக்கெடுப்பைத் ஆரம்பித்துள்ளோம்.

தற்போது, ​​ஹோமாகம நகரைச் சுற்றியுள்ள 5 அல்லது 6 கிராம சேவைப் பிரிவுகளில் 1,500 முதல் 2,500 வரையிலான மான்கள் விவசாயிகளின் அனைத்து உடமைகளையும் அழித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, அவற்றை மிகவும் பாதுகாப்பாக பிடித்து பொருத்தமான பகுதியில் விடுவிக்க முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

Related posts

இங்கிலாந்து புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

மேலும் 51 பேருக்கு கொரோனா

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி

editor