உள்நாடு

மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி இவ் வருடத்தில் நிறைவு [VIDEO]

(UTV|MATARA) – தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதியை இவ்வருடத்தின் முற்பகுதியில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபையில் நடைபெற்ற புத்தாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்தல், நாட்டின் மிக முக்கிய அபிவிருத்தி வளமான துறைமுகத்திற்கு அவசியமான கிழக்கு முனையத்தின் பணிகளை ஆரம்பித்து துறைமுகத்தை அபிவிருத்திச் செய்வதே இப்புத்தாண்டின் பிரதான எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பலஸ்தீன மண்ணில் புத்தாடைக்கு பதிலாக இரத்த ஆடை அணிந்த படி வலி கொண்ட பெருநாளை அனுபவித்துக் கொண்டிருப்பதை கனத்த மனதுடன் ஞாபகப்படுத்தி உணர்வுகளால் பங்கு கொள்கிறேன் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் உதுமாலெப்பை எம்.பி

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களது விபரம்

மீண்டும் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் – முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

editor