உள்நாடுபிராந்தியம்

மாணவி மரணம் – இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் எமக்கு வேண்டாம் – புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துக்குக் காரணமாகக் கருதப்படும் ஆசிரியர், புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் தங்களுடைய பாடசாலைக்கு வேண்டாமென்று அப்பாடசாலையின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாணவி கல்வி பயின்ற இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக பெரும் போராட்டம் ஒன்று நேற்று (08) முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த ஆசிரியரையும் கைது செய்யுமாறு போராட்ட காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

என்றாலும், குறித்த ஆசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன், ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆசிரியர் தமது பாடசாலைக்கு வேண்டாம் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

Related posts

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்க விருது!

வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை – சஜித் பிரேமதாச

editor

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக திறந்த பிடியாணை

editor