சமூகத்தில் வாழும் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் துன்பங்கள் குறித்து, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எழுப்பக்கூடிய அதிகபட்ச குரலை நாம் எழுப்பி வருகிறோம். மக்களின் பிரச்சினைகளை பேசும் அதே வேளையில், அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்காமை பொருட்டு அரசாங்கத்தை வலுயுறுத்தியும் வருகிறோம். மக்களின் பிரச்சினைகளுக்காக முன்நிற்பதை சிலர் பலவீனமான விடயமாக கருதி அதை எதிர்க்கின்றனர். முதியோர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குமாறு பேசும்போது, ஓய்வு பெற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு பேசும்போது, இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் குறித்து பேசும்போது, அவற்றுக்கான தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலுயுறுத்தும் போது, பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் குறித்து கேள்வி எழுப்பும் போது, மின்சாரக் கட்டணத்தை 33% குறைக்காமை குறித்து கேள்வி எழுப்பும் போது, அரசாங்கம் எரிபொருள் விலை சூத்திரத்தை பின்பற்ற மாட்டோம் என வாக்குறுதியளித்திருந்தாலும், வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து நாம் கேள்விகளை எழுப்பும் போது, இவ்வாறு கேள்விகளை எழுப்ப விரும்பாத சில தரப்பினரும் குழுக்களும் எம்மத்தியில் இருந்து வருகின்றனர் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்கள் சார்பாகக் குரல் எழுப்பி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேள்விகளை எழுப்பும்போது, இதனைப் பிடிக்காதவர்கள் எதிர்க்கட்சி தவறான வழியில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது மக்கள் பிரதிநிதிகளின் பணியாகும். எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்து தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது எதிர்க்கட்சியின் வேலையாகும். இந்தப் பணியை ஐக்கிய மக்கள் சக்தி சிறப்பாகவே நிறைவேற்றி வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த சில விடயங்கள் காரணமாக அரசாங்கம் செய்த சில தவறுகளை திருத்திக் கொள்ளவும், மீளப் பெற வேண்டிய சந்தர்ப்பங்களும் கூட காணப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய இளைஞர் சக்தியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சுரங்க ரத்நாயக்கவின் முயற்சியின் பயனாக அனுராதபுரம் யாய 11 பிரதேச வைத்தியசாலையை புதுப்பித்து மக்கள் பாவனைக்கு கைளிக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பங்கேற்றார். இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வைத்தியசாலை ஊழியர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டு குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ராஜாங்கனை பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார். இங்கு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இலவசக் கல்வியை வலுப்படுத்தி, நாட்டின் மாணவர் தலைமுறைக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பல தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டத்தை அரசாங்கம் இரத்துச் செய்திருந்தாலும், தவறைச் சுட்டிக்காட்டி நாம் எதிர்த்ததன் பிற்பாடு, அரசாங்கம் முடிவை மாற்றியது. இன்று, கல்வித் துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் வரலாற்றுப் பாடத்தை முற்றிலுமாக நீக்க முயற்சிக்கின்றனர். இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமும் கிளர்ந்தெழுந்துள்ளது. தேரர்கள், மதத் தலைவர்கள், மதகுருமார்கள் உள்ளிட்டோர் இதற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த அரசாங்கத்திற்கு இதுபோன்ற செயல்களைச் செய்வதற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை. மாறாக நாட்டிற்குப் பொருத்தமான கல்வியை உருவாக்குவதற்கே அதிகாரத்தை வழங்கினர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
🟩 கல்வித் துறை சீர்திருத்தம்.
தகவல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழிக் கல்வி போன்ற புதிய கல்வி வாய்ப்புகள் தொடர்பிலான விடயங்களை நானும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் முன்வைத்த போது எம்மைப் பார்த்து பரிகசித்தவர்கள்,
தற்போதுள்ள கல்வி முறையை நேர்மறையான சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தி, பிள்ளைகளுக்கு நன்மைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, மாணவர் தலைமுறையை அழிக்கும் குறுகிய பார்வை கொண்ட கல்விச் சீர்திருத்தத்தை நோக்கி நகர்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி இந்த பழமைவாத சீர்திருத்தத்தை எதிர்க்கிறது. என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி சுட்டிக்காட்டும் குறைபாடுகள் குறித்து சிலர் எதிர்க்கும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும்போது, எதிர்க்கட்சியின் குரலை அடக்குவதற்கு, எதிர்க் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று, முன்னாள் ஜனாதிபதி கையெழுத்திட்ட, மக்களுக்கு விரோதமான IMF ஒப்பந்தமே காணப்படுகின்றது. தற்போதைய அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் அடிமையாக மாறியுள்ளது.
அதன் தாளத்திற்கு ஆடும் பொம்மையாக மாறியுள்ளது. இதன் விளைவாகவே மின்சாரக் கட்டணங்களையும் எரிபொருள்களினது விலைகளையும் அதிகரித்துள்ளது. விலைச் சூத்திரங்களை மாற்றுவதாகச் சொன்ன அரசாங்கம், இன்று அந்த விலைச் சூத்திரங்களுக்கு அடிமைப்பட்டு காரியங்களை முன்னெடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 இன்று தேசிய பாதுகாப்பும் இல்லை. அறுவடைக்கு உத்தரவாத விலையும் இல்லை.
இன்று, நாடு பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றது. குற்ற அலை தினமும் அதிகரித்து வருகிறது. நாளாந்தம் உயிர்கள் இழக்கப்படுகின்றன. கொலைகாரர்கள், கொள்ளையர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்தியவர்கள் சமூகத்தின் கட்டுப்பாட்டைக் கையகப்படுத்தியுள்ளனர்.
இந்த அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கைச் சரியாக பேண முடியாதுபோயுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து டியுசன் எடுப்போம் என சொன்ன அரசாங்கத்துக்கு இன்று குடிமக்களிடமிருந்து டியுசன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், விவசாயிகளுக்கு கூட நிவாரணம் கிடைத்தபாடில்லை.
அறுவடைக்கு நிலையான விலை கிடைக்காமை, உரம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு, தரமான விதைகள் கிடைக்காமை போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 மக்களுடன் மாத்திரமே எமது டீல். உயிரை விடவும் அதனைப் பாதுகாப்போம்.
நெல்லுக்கு நிலையான விலைப் பெற்றுத் தருவோம் எனக் கூறிய இந்த அரசாங்கம், தற்போது நெல் தரகர்கள் அதை குறைந்த விலைக்கு வாங்கும்போது அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் பிரச்சினைகளைப் வெளிப்படையாக பேசி அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எமக்கு அரசியல் சதிகளோ அல்லது டீலகளோ இல்லை.
எமது ஒரே டீலும் ஒரே சமூக ஒப்பந்தமும் பொதுமக்களுடன் மட்டுமே காணப்படுகின்றன. இந்த நம்பிக்கையை உயிரைவிடவும் பாதுகாப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.