அரசியல்உள்நாடு

மாணவர் குறைவாகவுள்ள பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு முன் மாற்று நடவடிக்கை அவசியம் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

மாணவர்கள் குறைவாக உள்ள பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அவ்வாறான பாடசாலைகளை மூடிவிடுவதற்கு முன்னர் அங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாற்று நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய மக்ள் சக்து பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

குறைவான மாணவர்கள் எண்ணிக்கையுடைய பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்போவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் உள்ள அரச பாடசாலை கட்டமைப்பில் 15 வீதமானவை 50க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ளது. 100 மாணவர்களை விடவும் குறைவான எண்ணிக்கை கொண்ட 3144 பாடசாலைகள் உள்ளன.

இதன்படி அரச பாடசாலைகளில் மூன்றில் ஒரு பங்கு நூற்றுக்கும் குறைவான மாணவர்களே உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

மக்கள் சனத்தொகை குறைவாக இருக்கும் கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும்.

அதேபோன்று அந்த கிராமத்தில் இருக்கும் வசதிபடைத்த பெற்றோர்களின் பிள்ளைகள் தூரப்பிரதேசத்தில் இருக்கும் பாடசாலைகளுக்கு செல்வார்கள். வசதி குறைந்த பெற்றோர்களின் பிள்ளைகளே கிராமங்களில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பார்கள்.

இவ்வாறான பாடசாலைகளை மூடிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமானால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கான மாற்று திட்டத்தை அரசாங்கம் முன்வைக்காமல் இதனை செய்யக்கூடாது.

அதேநேரம் பாடசாலை கல்வியை தொடராமல் இடைவிலகிய மாணவர்களின் தொகை தொடர்பாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

மாணவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து பல கிலாேமீட்டர் அப்பால் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களே இவ்வாறு அதிகமாக இடைவிலகுகின்றனர்.

இவ்வாறான மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வதன் மூலம் ஓரளவு இதற்கு தீர்வுகாண முடியும் என்றே நாங்கள் நம்புகிறோம்.

கோட்டபா ராஜபகஷ், அன்று மாளிகாவத்தையில் இருந்த மக்களை அங்கிருந்து அகற்றி, மட்டக்குளி பிரதேசத்தில் குடியர்த்தினார்.

இதன் காரணமாக அதிகமான பிள்ளைகள் மட்டக்குளியில் இருந்து மாளிகாவத்தைக்கு பாடசாலைக்கு வந்து செல்வதற்கு சிரமப்பட்டதால், அதிகமான மாணவர்கள் அன்று பாடசாலை கல்வியை இடை நிறுத்திக்கொண்டார்கள்.

அதனால் அரசாங்கம் இது போன்ற தீ்ரமானங்களை எடுக்கும்போது மாணவர்களின் எதிர்காலம் குறித்தும்.

அவர்களுக்கான மாற்று திட்டங்கள் தொடர்பாகவும் அறிவித்து விட்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் உயர்வு

ஜனாதிபதி பாரளுமன்ருக்கு

கடுமையான காற்று – இருளில் மூழ்கிய மலையகம்

editor